search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுப்பெண் மாயம்"

    கோவையில் திருமணம் ஆன சில நாட்களிலேயே புதுப்பெண் மாயமானதாக அவரது கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை துடியலூரை சேர்ந்த 28 வயது வாலிபர் ஒருவருக்கும், மைசூரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த 11-ந் தேதி திருமணம் நடந்தது. கணவன், மனைவி இருவரும் துடியலூரில் வசித்து வந்தனர். 

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த வாலிபர் தனது தந்தையை அழைத்து கொண்டு வெளியே சென்றார். சிறிது நேரம் கழித்து வீடு திரும்பினார். அப்போது மனைவி வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம், பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தார். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து கணவர் துடியலூர் போலீசில் புகார் தெரிவித்தார். 

    புகாரில் தனது மனைவிக்கு திருமணத்திற்கு முன்பு ஒரு வாலிபருடன் பழக்கம் இருந்ததாகவும், அவருடன் சென்று இருக்கலாம் என சந்தேகம் இருப்பதாகவும் கூறினார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான புதுப்பெண்ணை தேடி வருகின்றனர்.

    வெள்ளிச்சந்தை அருகே திருமணமான 2 மாதத்தில் தோழியுடன் புதுப்பெண் மாயமானது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
    ராஜாக்கமங்கலம்:

    வெள்ளிச்சந்தை அருகே ஆசாரிவிளை காலனியை சேர்ந்தவர் ரேணுகா. இவரது மகள் மார்க்ரெட் ஜெரின் (வயது 21.) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் மார்க்ரெட் ஜெரின். அவரது தோழி அதே பகுதியை சேர்ந்த ஆஷிகா (18) என்பவருடன் சம்பவத்தன்று கடைக்கு சென்று வருவதாக கூறி வெளியே சென்றுள்ளார்.

    நீண்ட நேரம் ஆகியும் இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால் அவருடைய உறவினர்கள் பல இடங்களில் தேடியும் எங்கும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து மார்க்ரெட் ஜெரின் தாயார் ரேணுகா கொடுத்த புகாரின் பேரில் வெள்ளிச்சந்தை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றார்.
    பாகூர் அருகே திருமணமான 1½ மாதத்தில் புதுப்பெண் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பாகூர்:

    பாகூரை அடுத்த பெரியகாட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகவேல் (வயது 28). கட்டிட தொழிலாளி. இவருக்கும், பாகூரை அடுத்த குடியிருப்புபாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ராமமூர்த்தியின் மகள் செரினா (25) என்பவருக்கும் கடந்த 1½ மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.

    திருமணம் முடிந்ததும் முருகவேல் தனது மாமனார் வீட்டில் தங்கி இருந்து வந்தார்.

    இந்த நிலையில் செரினாவுக்கு தனது கணவரை பிடிக்கவில்லை என்று தெரிகிறது. கடந்த 23-ந்தேதி செரினா பாகூரில் உள்ள மார்க்கெட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்றார்.

    அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் கவலை அடைந்த தந்தை ராமமூர்த்தி பல இடங்களில் தனது மகளை தேடினார். எங்கும் அவரை காணவில்லை. இதனை தொடர்ந்து ராமமூர்த்தி பாகூர் போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருள்மணி வழக்குபதிவு செய்து மாயமான புதுப்பெண் செரினாவை தேடி வருகிறார்.

    திருமணமான 1½ மாதத்தில் புதுப்பெண் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுப்பெண் உள்பட 3 பெண்கள் மற்றும் ஒரு கூலி தொழிலாளி என 4 பேர் மாயமாகி உள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுப்பெண் உள்பட 3 பெண்கள் மற்றும் ஒரு கூலி தொழிலாளி என 4 பேர் மாயமாகி உள்ளனர். இதுபற்றிய விபரம் வருமாறு:-

    கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் பிச்சுமணி. இவரது மகள் முருகேஸ்வரி (வயது19). இவர் கடையநல்லூரில் உள்ள கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் முருகேஸ்வரிக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயம் செய்தனர்.

    நாளை மறுநாள் 13-ந்தேதி (புதன்கிழமை) திருமணம் நடக்க உள்ளது. இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி அதிகாலையில் வீட்டில் இருந்த முருகேஸ்வரியை காணவில்லை. இது குறித்து அவரது தந்தை பிச்சுமணி கடையநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேஸ்வரியை தேடி வருகிறார்கள்.

    நெல்லை தாழையூத்து சங்கர்நகரை சேர்ந்தவர் வெங்கட சுப்பிரமணியன். இவரது 17 வயது மகள் பாளையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 8-ந்தேதி கல்லூரிக்கு சென்ற மாணவி அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இது குறித்து வெங்கட சுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாளையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள மேலசெவல் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர் ராஜ் (வயது56). இவரது மனைவி சரஸ்வதி (38). கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி ராதாபுரத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்ற சரஸ்வதி, அதன்பிறகு வீடு திரும்பவில்லை. தாய் வீட்டுக்கும் செல்லவில்லை. அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை.

    இதுகுறித்து சுந்தர்ராஜ் முன்னீர்பள்ளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சரஸ்வதியை தேடி வருகிறார்கள்.

    களக்காடு அருகே உள்ள சிங்கிகுளத்தை அடுத்த தச்சங்குளம் பகுதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது35), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஜெயலட்சுமி (33), கடந்த 3-ந்தேதி கூலி வேலைக்கு சென்ற சொக்கலிங்கம் வீடு திரும்ப வில்லை. இதுகுறித்து ஜெயலட்சுமி, களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சொக்கலிங்கத்தை தேடி வருகிறார்கள்.

    தருமபுரி அருகே புதுப்பெண் மாயமானது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் மாரவாடி அருகே உள்ள பழையூர் பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசன் (வயது 27). இவர் தனியார் டிராக்டர் கம்பெனி நிறுவனத்தில் சூப்பர் வைசராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் வெள்ளாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த நவீனா என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது.

    சம்பவத்தன்று கணவன்- மனைவி 2 பேரும் முத்தம் பட்டியில் உள் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றுவிட்டு வரும் வழியில் ஒரு ஓட்டலுக்கு சாப்பிடுவதற்காக சென்றனர். அப்போது தான் கழிவறைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற நவீனா நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை.

    இதனால் பதறிப்போன கணவர் அன்பரசன் பல இடங்களில் தேடி பார்த்தார். எங்கும் தேடியும் நவீனா கிடைக்காததால் அவர் மாயமானது தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து அன்பரசன் தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
    திருமணம் ஆகி 40 நாளில் புதுப்பெண் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், இண்டூர் அடுத்துள்ள கூலிகாரன் கொட்டாய் பகுதியை சேர்ந்த சக்திவேல் மகள் தமிழ் செல்விக்கும், அதே பகுதியை சேர்ந்த சின்னத்துரை என்பவருக்கும் கடந்த 40 நாட்களுக்கு முன் திருமணம் நடந்து முடிந்தது. இதனால் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர். 

    கடந்த 20-ந்தேதி அன்று கணவன், மனைவி இருவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது அதிகாலையில் தமிழ்செல்வி வீட்டில் இருந்து மாயமாகி விட்டார். இதனால் பதறி போன சின்னத்துரை மனைவியின் தந்தை சக்திவேலுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து தமிழ்செல்வியை பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கும் தேடியும் அவர் கிடைக்கவில்லை. 

    இது குறித்து இண்டூர் போலீசில் சக்திவேல் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான தமிழ்செல்வியை போலீசார் தேடி வருகின்றனர். திருமணம் ஆகி 40 நாளில் புதுப்பெண் மாயமானதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கும்மிடிப்பூண்டி அருகே நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுப்பெண் குடும்பத்துடன் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த கம்மார்பாளையத்தை சேர்ந்தவர் புதுமை வேந்தன். இவருக்கும் பொன்னேரி என்.ஜி.ஓ. நகரில் வசித்து வந்த இளம் பெண்ணுக்கும் நாளை (திங்கட்கிழமை) திருமணம் செய்ய முடிவு செய்தனர். அவர்களது திருமணம் செங்குன்றத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடக்க இருந்தது.

    இரு வீட்டாரும் உறவினர்களுக்கு திருமண பத்திரிகை கொடுத்து தடபுடலாக ஏற்பாடுகள் செய்து வந்தனர்.

    இந்த நிலையில் புதுப்பெண்ணும், அவரது குடும்பத்தினரும் திடீரென மாயமானார்கள். அவர்கள் வீட்டை காலி செய்து விட்டு தலைமறைவாகி விட்டது தெரிந்தது.

    இதனை அறிந்த மணமகன் வீட்டார், மணமகள் தரப்பினரின் செல்போன்களில் தொடர்பு கொண்ட போது அவை ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.

    அதிர்ச்சி அடைந்த மணமகன் வீட்டார் இதுபற்றி கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதில் “நிச்சயதார்த்தம் நடந்த போது புதுப்பெண்ணுக்கு 4 பவுன் நகை, ரூ.2½ லட்சம் ரொக்கப் பணம் கொடுத்தோம்“ என்று தெரிவித்து உள்ளனர்.

    நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுப்பெண் குடும்பத்துடன் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புதுப் பெண்ணின் சொந்த ஊர் திருவண்ணாமலை ஆகும். திருமணத்தில் அவருக்கு விருப்பம் இல்லாததால் குடும்பத்துடன் மாயமானாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மீஞ்சூர் அருகே அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் புதுப்பெண் திடீரென்று மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகர், செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகள் சசி (20). பி.எஸ்.சி. படித்து உள்ளார்.

    சசிக்கும் உறவினர் ஒருவரது மகனுக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. அவர்களது திருமணம் அடுத்தமாதம் நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை இருவீட்டு பெற்றோர் செய்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சசி பின்னர் திரும்பி வரவில்லை. மேலும் வீட்டில் இருந்த 10 பவுன் நகை, படிப்பு சான்றிதழ்களும் மாயமாகி இருந்தது.

    இது குறித்து மீஞ்சூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது சசி எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர். அவரை யாரேனும் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார்களா? என்ற கோணத்தில் போலீ சார் விசாரித்து வருகின்றனர்.

    கடலூரில் புதுப்பெண் மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் புதுப்பெண் தேடி வருகிறார்கள்.

    கடலூர்:

    கடலூர் வில்வநகரை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி மெர்சி (வயது 19). இவர்களுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகிறது.

    இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக மெர்சி கணவரை பிரித்து அதே பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    நேற்று மாலை வெளியில் சென்று வருவதாக தந்தை செல்வத்திடம் கூறிவிட்டு மெர்சி சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

    இதனால் கவலை அடைந்த செல்வம், மகளை பல இடங்களில் தேடிப் பார்த்தார். எங்கும் அவரை காணவில்லை.

    இதனை தொடர்ந்து அவர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான புதுப்பெண் மெர்சியை தேடி வருகின்றனர். 

    திருமங்கலம் அருகே வருகிற 4-ந்தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் புதுப்பெண் திடீரென மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பேரையூர்:

    திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டியை அடுத்துள்ள வி.அம்மா பட்டியை சேர்ந்தவர் சின்னக்காளை. இவரது மகள் பவானி (வயது 20). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு வருகிற 4-ந்தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது.

    திருமணத்திற்கு சில நாட்களே இருந்ததால் சின்னக்காளை மற்றும் உறவினர்கள் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை பவானி வெளியில் சென்று விட்டு வருவதாக கூறி சென்றார். அதன் பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டமடைந்த சின்னக்காளை மகளை காணாமல் உறவினர் மற்றும் தோழிகள் வீடுகளில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    எனவே டி.கல்லுப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான புதுப்பெண்ணை தேடி வருகின்றனர். திருமணத்துக்கு இரண்டு நாட்களே இருந்த நிலையில் மணப்பெண் மாயமானதால் குடும்பமே சோகத்தில் மூழ்கியது. #Tamilnews
    ×